கோலாலம்பூர், டிச.30- நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளையின் பிறப்பும், கட்டாயம் தேசிய பதிவுத் துறையின் கீழ் பதிவுச் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர் வலியுறுத்தப்படுகின்றனர்.
அவர்களில் உடற்பேறு குறைந்த பிள்ளைகளும் அடங்குவர்.
அது சிறார் MYKAD அடையாள அட்டை பெற வகை செய்யும் அதே வேளை,
அரசு ஏற்படுத்தி தந்திருக்கும் பல்வேறு உதவிகளையும், திட்டங்களையும் அவர்கள் நுகர துணைகோலும் என JPN தெரிவித்தது.
MEKAR மக்களிடையே அன்பை விதைக்கும் திட்டம் உட்பட, பல்வேறு சமூக நட்புறவுத் திட்டங்கள் வாயிலாக,
மலேசியக் குடியுரிமைக்குத் தகுதிப் பெற்ற எல்லோரும், MYKAD அட்டையை பெற உதவ, தமது தரப்பு உறுதிப்பூண்டுள்ளதாக, JPN தலைமை இயக்குநர் Datuk Badrul Hisham Alias தெரிவித்தார்.
இவ்வாண்டு, இம்மாதம் வரையிலான நிலவரப்படி, அடையாள அட்டை மீதான ஒரு லட்சம் விண்ணப்பங்களை தேசியப் பதிவுத் துறை பெற்றுள்ளது.
அதில் மூவாயிரத்து முன்னூறு நாடு முழுவதும் நடத்தப்பட்ட MEKAR திட்டம் வாயிலாக பெறப்பட்டவை.
இன்றைய காலக்கட்டத்தில் நாட்டில் அரசு அனுகூலங்களை பெற வேண்டுமெனில் மக்கள் MYKAD அட்டையை கொண்டிருப்பது மிக அவசியமென Datuk Badrul Hisham Alias சுட்டினார். Admin:sabthamstv