Thursday, 16 April 2026

ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவோம்!

ஒருமைப்பாட்டை தொடந்து ஓங்கச் செய்வோம்!

அந்த உணர்வுகளுடன், 2026 எனும் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம் - என மலேசிய மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி, FACEBOOK-இல் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மறுமலர்ச்சியின் உண்மைப் பொருள்-உணர்ந்து, அதனை நாட்டு மக்கள் தொடரச் செய்ய வேண்டும்.

நாட்டின் வளப்பத்தை சமூகத்தின் ஒவ்வொரு தட்டு மக்களும் அனுபவிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

மலேசிய மதானி கோட்பாட்டை வெற்றியடையச் செய்யும் திட எண்ணத்தை அனைவரும் வளர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் முன்னேற்றமும், மக்களின் நல்வாழ்வும் நீடிக்க தமது துணைவியார் DATUK SERI DR WAN AZIZAH WAN ISMAIL -உடன் இணைந்து வேண்டுவதாக, பிரதமர் பதிவிட்டுள்ளார்.

2026, மலேசியர்கள் அனைவருக்கும் பொருள் பொதிந்ததாகவும், சிறப்பானதாகவும் அமைய வாழ்த்துவதாக, டத்தோஸ்ரீ அன்வார், குறிப்பிட்டுள்ளார்.Admin : sabthamstv