கோலாலம்பூர், ஜனவரி 1
வீரம், ஞானம், கருணை ஆகியவற்றின் திருவுருவாக பக்தர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற பத்துமலையானுக்கு,
பொன்னிறத்தில் மின்னும் அந்தத் தமிழ் கடவுளின் புகழுக்கு சிறப்பூட்டும் பெருவிழாவை, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவாஸ்தானம், கோலாகலமாக எடுத்து நடத்தியது.
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து ஓடி வந்த முருகனின் பாதம்,
இன்று மக்களின் எண்ணற்ற பக்தியால் நனைந்தது.
காலை ஏழு மணித் தொடங்கி சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு வழிபாடுகளும் நடத்தப்பட்டன.
பத்தாம் ஆண்டாக நடத்தப்படும் பன்னீர் அபிஷேகத்தின் சிறப்பு அம்சமாக,
பத்துமலை முருகன் பெயரால் கந்த சஷ்டி கவசமும் இயற்றப்பட்டது.
கொட்டிய மழையையும் பாராது, வாழ்க்கைச் சுமைகளுக்கு விடை தேடி, புதிய நம்பிக்கையுடன் குமரனின் திருவடியை நாடிய மக்களின் முகங்களில் தெரிந்த அமைதியும் பிரகாசமும்,
முருகன்பால் அவர்கள் கொண்டிருந்த பக்தியை மெய்ப்பித்தன.
அந்த அகமகிழ்வோடு 140 அடி உயரம் கொண்ட முருகனின் திருவடிக்கு அபிஷேகம் செய்ய வாய்ப்பு கிட்டியது எண்ணி பக்த மெய்யன்பர்களில் சிலர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.admin-sabthamstv