Thursday, 16 April 2026

மலேசிய ஆயுதப் படை உயர் அதிகாரியை, SPRM விசாரணையும் தொடர்பு படுத்துவது, அடிப்படையற்ற அவதூறு.

Kuala Lumpur,January 3

அத்தகைய வதந்தியைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்புடைய நடவடிக்கை எடுக்கப்படும் என, தற்காப்பு அமைச்சர் DATUK SERI MOHAMED KHALED NORDIN உறுதியளித்தார்.

அடிப்படையற்ற அத்தகையக் குற்றச்சாட்டுகள், மலேசிய ஆயுதப் படையின் தோற்றத்தை மட்டும் பாதிக்கவில்லை.

மாறாக, நாட்டின் தற்காப்புப் படையின் உயர்நெறி மீதான நம்பிக்கைக்கு ஊறுவிளைவிப்பதாக அமைச்சர் வருந்தினார்.

அதேவேளை, மலேசிய ஆயுதப் படை அதிகாரிகள், உறுப்பினர் மத்தியில் ஊழல், அதிகார முறைகேடு நிலவினால், கிஞ்சிற்றும் தயைக் காட்டப்படாது.

ஊழல்-முறைகேடு தொடர்பான புகார்கள் கடுமையாகவும் சட்டப்படியும் விசாரிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

KAMPUNG MAKAN சமூக நட்புறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், DATUK SERI MOHAMED KHALED, செய்தியாளர்களிடம் பேசினார்.

மலேசிய ஆயுதப் படை உயர் அதிகாரியை, SPRM விசாரணையும் தொடர்பு படுத்துவது, அடிப்படையற்ற அவதூறு.

அத்தகைய வதந்தியைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்புடைய நடவடிக்கை எடுக்கப்படும் என, தற்காப்பு அமைச்சர் DATUK SERI MOHAMED KHALED NORDIN உறுதியளித்தார்.

அடிப்படையற்ற அத்தகையக் குற்றச்சாட்டுகள், மலேசிய ஆயுதப் படையின் தோற்றத்தை மட்டும் பாதிக்கவில்லை.

மாறாக, நாட்டின் தற்காப்புப் படையின் உயர்நெறி மீதான நம்பிக்கைக்கு ஊறுவிளைவிப்பதாக அமைச்சர் வருந்தினார்.

அதேவேளை, மலேசிய ஆயுதப் படை அதிகாரிகள், உறுப்பினர் மத்தியில் ஊழல், அதிகார முறைகேடு நிலவினால், கிஞ்சிற்றும் தயைக் காட்டப்படாது.

ஊழல்-முறைகேடு தொடர்பான புகார்கள் கடுமையாகவும் சட்டப்படியும் விசாரிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

KAMPUNG MAKAN சமூக நட்புறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், DATUK SERI MOHAMED KHALED, செய்தியாளர்களிடம் பேசினார்.Admin: sabthamstv