Thursday, 16 April 2026

இயங்கலையில் பாதுகாப்புச் செயற்குழு தோற்றுவிக்கப்பட்டது.

Kuala Lumpur,January 3

நாட்டின் இயங்கலை பாதுகாப்பு இலக்கை முன்னெடுத்துச் செல்வதில், உயர் வியூக ஆலோசனைக் குழுவாக அது இயங்கும்.

பிரதமர் துறையின், சட்ட-கழக மறுமலர்ச்சி அமைச்சர் DATUK SERI AZALINA OTHMAN SAID அதனைத் தெரிவித்தார்.

TAN SRI HASNAH MOHAMMED HASHIM அந்தச் செயற்குழுவுக்குத் தலைமையேற்றுள்ளார்.

நேற்று நடப்புக்கு வந்த அவரின் நியமனம், 2028 டிசம்பர் 31-ஆம் நாள் வரை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

ONSA சட்டச் செயல்பாட்டில், மலேசிய தொடர்பு-பல்லூடக ஆணையம், MCMC-க்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட பணிகளை அது மேற்கொள்ளும்.

இயங்கலையில், சிறார் பாலியல் துன்புறுத்தல், நிதி மோசடி போன்ற முதன்மை குற்ற அம்ச உள்ளடக்கங்களை வரையறுப்பதிலும் அந்தச் செயற்குழு பங்களிக்கும்.

பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இயங்கலை மற்றும் இணையக் கூறுகளை ஆய்வது, தடுப்பு வியூகங்களை வகுப்பது ஆகியவற்றுக்கான அணுகுமுறைகளையும் அது முடிவு செய்யும்.

சட்டத்துக்கு முரணான அடக்கங்கள் மீதான சட்டச் செயலாக்கம், புகார்களை மதிப்பிட்டுக் கையாள்வது உள்ளிட்ட பணிகளையும் அந்தச் சிறப்புச் செயற்குழு மேற்கொள்ளும் என, DATUK SERI AZALINA விவரித்தார்.admin:sabthamstv