நாட்டிலுள்ள 10 நெடுஞ்சாலைகளில் அடுத்தாண்டு கட்டணம் உயர்த்தப்படாது.
அவற்றில் நடப்பு கட்டண விகிதமே நிலைநிறுத்தப்படும்.
அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான முடிவு எட்டபட்டதாக, தொடர்பு அமைச்சர் DATUK FAHMI FADZIL தெரிவித்தார்.
நாட்டின் பத்து நெடுஞ்சாலைகளுக்கான பராமரிப்புக் கட்டணம், ஒப்பந்தப்படி, அடுத்தாண்டு உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதற்கான செலவை அரசு ஏற்றுக் கொள்கிறது. அரசாங்கத்துக்கு இது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றாலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்படுவதாக, அமைச்சர் கூறினார்.
இந்த விவகாரத்தைப் பொதுப்பணி அமைச்சு நுண்ணோக்கும் என்றும் அவர் விவரித்தார். ANGKASAPURI-யில் நடைபெற்ற வாராந்திர ஊடகச் சந்திப்பில், மதானி அரசு பேச்சாளருமான DATUK FAHMI, இந்தத் தகவலை வெளியிட்டார்.