Thursday, 16 April 2026

மக்கள் நனே மதானி அரசின் அடிப்படைக் கொள்கை!

Kuala Lumpur,5 January 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அந்த உத்தரவாதத்தை வழங்கினார்.

இலக்கிடப்பட்ட உதவிகள், வாழ்க்கைச் செலவினத்தைக் கட்டுப்படுத்த ஆதரவு, பொதுச் சேவை பணியாளர் ஊதிய உயர்வு ஆகியவற்றுடன்,

கல்வி, சுகாதார முன்னெடுப்புகளையும் மதானி அரசு செயலாக்கும்.

மக்களின் வாழ்வைச் செழிப்புற வைக்கும் அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் உந்தச் செய்வது, அரசின் கடப்பாடு என பிரதமர் எடுத்துரைத்தார்.

நிலையான பொருளாதார வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல், நாட்டைச் செழிப்புறச் செய்தல் ஆகியவை அரசின் தலையாயப் பணிகளாக விளங்குகின்றன.

அதேவேளை, குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளப்பத்தை நியாயமான முறையில் அனுபவிப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

அதன் பொருட்டே, அரசு இத்தகைய முன்னெடுப்புகளைச் செயல்படுத்துகிறது என, பிரதமர் விவரித்தார்.

மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசின் இந்த மறுமலர்ச்சி முயற்சிகளும் முன்னெடுப்புகளும், நாட்டு நிர்வாகத்தை வலுப்படுத்தும்.

இதன்வழி, அனைவருக்கும் நியாயமான, கௌரவமான எதிர்காலத்தைக் கொண்ட மலேசியாவை உருவாக்கித் தர இயலும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.Admin :sabthamstv