Thursday, 24 September 2026

மதானி அரசாங்கத்தில் நிலவும் ஒருமைப்பாட்டை, சிறுமைபடுத்த வேண்டாம்!

நடப்பு அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள எல்லா கட்சிகளுக்கு இடையேயும், வலிமையான ஒத்துழைப்பு நிலவுகிறது.

அதுவே நாட்டின் நிலைத்தன்மையும் அமைதிக்கும் வழிவகுத்திருக்கிறது.

இணைந்து பணியாற்றுவதும், தெளிவான இலக்கைக் கொண்ட தலைமைத்துவத்துவமுமே, ஒரு நாட்டின் உண்மையான வலிமை என்பதற்கு இவையே சான்று என, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துதல், முழுமையான கழக மறுமலர்ச்சியைச் செயல்படுத்துதல், சமரசம் இல்லாமல் ஊழலை ஒழிப்பது ஆகிய கடப்பாடுகளை, மதானி அரசு தொடர்கிறது.

வட்டாரத்தில் நனிச்சிறந்த, நிலையான நாடாக மலேசியா உருவாவதை உறுதி செய்வதற்கான அடிப்படைகள் அவை.

எனவே, இணைந்து பணியாற்றுவதற்கான அவசியத்தை மெத்தனமாகக் கருத வேண்டாம்.

ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நன்மையை விளைவிக்க இயலும் என்றும் பிரதமர் கோடிகாட்டினார்.

மக்களின் ஆற்றல் மீதும், பொதுச் சேவை பணியாளர் மீதும் கொண்டிருக்கும் நம்பிக்கை, கொள்கைகளைச் செயலாக்குவதில் ஆணிவேராகத் திகழ்கிறது.

அரசாங்கத் தலைமைத்துவம் கொண்டிருந்த பற்றுறுதி, கடந்த மூன்றாண்டுகளில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவும், சரியான தடத்தில் பயணிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தியிருப்பதாக, பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் துறை அமைச்சின் மாதாந்திர சந்திப்பில், வழங்கிய புத்தாண்டு செய்தியில் டத்தோஸ்ரீ அன்வார் இந்தத் தகவல்களை அளித்தார்.admin:sabthamstv