Friday, 17 April 2026

கூடுதல் பாதுகாப்பு கூறுகளுடன், கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

தேசிய அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்த முனைப்பு மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சர் DATUK SERI SAIFUDDIN NASUTION ISMAIL குறிப்பிட்டார்.

புதிய வகை கடப்பிதழும் அடையாள அட்டையும்,  மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூறுகளை உள்ளடக்கி இருக்கும் அதே வேளையில்,

போலி ஆவண தயாரிப்புகளை தடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என  DATUK SERI SAIFUDDIN NASUTION ISMAIL தெரிவித்தார்.

உலக அளவில் பாதுகாப்பான நம்பகத்தன்மையான கடப்பிதழ்களில் ஒன்றாக மலேசிய கடப்பிதழ் விளங்குகிறது.

அதனால், மலேசிய கடப்பிதழைக் கொண்டிருப்போர் பல நாடுகளுக்குள் விசா இன்றி நுழைய முடிகிறது.

அவ்வகையில் தேசிய ஆவணங்களில் உயர்நேறியை கடைப்பிடிக்க இந்த் மேம்பாடு மிகவும் அவசியமென அமைச்சர் சுட்டினார்.

நடப்பில், உள்ள கடப்பிதழ்கள் காலாவதி ஆகும் வரையில் அவற்றை  பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கினார்.

புதிய அடையாள ஆவணங்கள் நடைமுறைக்கு வரும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என DATUK SERI SAIFUDDIN NASUTION ISMAIL  கூறினார்.admin:sabthamstv