Thursday, 16 April 2026

தேசிய பேரிடர் நிர்வாக மன்றத்தை தோற்றுவிக்கப் பரிந்துரை...

Kuala Lumpur, Jan 8

பேரிடர் மேலாண்மையை ஒருங்கிணைப்பதிலும், அவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதிலும் மிக உயர்ந்த அமைப்பாக அந்த மன்றம் செயல்படும் என துணைப்பிரதமர் Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.

இடர்களால் பாதிப்புறும் மக்களுக்கு தகவல்களை சரியாகக் கொண்டு சேர்க்கவும், தொடர்பு அம்சங்களின் மீதும் தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் முதன்மை கவனம் செலுத்தும்.

மக்களிடையே குழப்பங்களை தவிர்க்கும் பொருட்டு, பேரிடர்களின் போது திட்டமிட்ட - துல்லியமான தகவல்கள்,, 

முதன்மை பேச்சாளராக இயங்கக்கூடிய அதிகாரப்பூர்வ மூலத்தின் வாயிலாக ஒன்றிணைக்கப்படுவது முக்கியம். 

அதே வேளை, பேரிடர் தொடர்பில் மற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் யாவும்,,

சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த முறையில் குளறுபடிகள் அன்றி மக்களிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும் என துணைப்பிரதமர் தெளிவுப்படுத்தினார். 

புத்ராஜெயாவில், NADMA ஊழியர்களுடனான 2026 புத்தாண்டு பேரவா கூட்டத்தில், அதன் தலைவருமான Datuk Seri Dr. Ahmad Zahid உரையாற்றினார்.admin:sabthamstv