Thursday, 16 April 2026

பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கான கருணைத் தொகை அதிகரிக்கப்படும்.

பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கான கருணைத் தொகை அதிகரிக்கப்படும்.

அதற்கான பரிந்துரை, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என, துணைப்பிரதமர் DATUK SERI DR AHMAD ZAHID HAMIDI கோடிகாட்டினார். பேரிடர் குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 500 ரிங்கிட் வழங்கப்பட்டு வந்தது. அது அண்மையில் ஆயிரம் ரிங்கிட்டாக அதிகரிக்கபப்ட்டது. அதேவேளை, மக்களின் வாழ்கைச் செலவினமும் உயர்ந்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு, கருணைத் தொகையை அதிகரிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. அரசின் நிதியாற்றலுக்கு ஏற்ப, அந்த விகிதம் அமையும் என, துணைப்பிரதமர் கூறினார். குவந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த பின், DATUK SERI DR AHMAD ZAHID ஊடகத்தாரிடம் பேசினார்.