Thursday, 16 April 2026

வாழ்வின் திசையறியாது திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்....SULTAN NAZRIN SHAH

Ipoh,Jan 13

பொருட் செல்வம் என்பது முஸ்லிம்கள் சிலரின் வாழ்வியல் கோட்பாடு ஆகிவிட்டது.

அதனை ஈட்டும் போட்டியில், அவர்கள் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக, SULTAN NAZRIN SHAH வருத்தம் தெரிவித்தார். 

பொருள் சேர்ப்பதற்காக கோட்பாட்டுக்கும், மாந்த வாழ்வியலுக்கும் எதிரான போக்கில் சென்று, உயர்நெறியை அவர்கள் தவற விடுவதாக, பேராக் ஆட்சியாளர் குறைப்பட்டார்.

பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்றும் பேராசையில், ஆதரவைப் பெறுவதற்குக் கையூட்டு கொடுக்கின்றனர்.

அடுத்தவர் மீது அவதூறு பரப்புவதை வழக்கமாக்கி, மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி அவர்கள் நகர்கின்றனர்.

மாந்தரிடையே, நிர்வாக பலவீனம், உயர்நெறியில்லா போக்கு, இஸ்லாமிய கழகங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதையும் சுல்தான் நினைவுறுத்தினார்.

இஸ்லாமிய கழகங்களை நிர்வகிக்கவும் தலைமையேற்கவும் பொறுப்பு வழங்கப்பட்டோர்,

ஐயத்துக்கு அப்பாற்பட்ட உயர்நெறியைக் கொண்டிருக்க வேண்டும்.

அதேவேளை, புத்தாக்கச் சிந்தனைகளை உதிக்கச் செய்து, ஆக்ககரமான செயல்திறன்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

புதிய வட்டாரங்களை ஊடுருவுவதிலும், புதிய எல்லைகளைக் கடப்பதிலும் துணிச்சலை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தினார்.

மலேசிய இஸ்லாமிய விவகார தேசிய மன்றத்தின் 74-ஆம் கூட்டத்தில், அதன் தலைவருமான Sultan Nazrin உரையாற்றினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். Admin:sabthamstv.