Kuala Lumpur,Jan 13
60 ஆயிரம் மாணாக்கர் பயனுறும் அந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் 2 கோடியே 40 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
அஸ்வாரா, மலேசிய ஆள்பலத் துறை பயிற்சிக் கழகம், அரசு பகுதி மானிய பல்கலைக்கழகம், மாநில அரசுக்குச் சொந்தமான உயர்கல்விக் கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணாக்கரும் இனி FLYsiswa திட்டத்தில் பயன்பெறலாம்.
தகுதியுடைய ஒவ்வொரு மாணாக்கரும், MALAYSIA AIRLINES, AIRASIA, BATIK AIR, FIREFLY, AIR BORNEO ஆகியவற்றில் பயணிக்க, 400 ரிங்கிட் மதிப்பிலான இலக்கவியல் பற்றுச் சீட்டைப் பெறுவர்.
இந்த விரிவாக்கத்தால், கூடுதலாக ஆறாயிரத்து 278 மாணக்கர் பயனுறுவர் என அந்தோனி லோக் கூறினார்.Admin:sabthamstv.