Kuala Lumpur,Jan 13
செயற்கை நுண்ணறிவுத் தளமான GROK, மலேசிய இணைய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டத்தை தொடர்ந்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
சிறார் உட்பட அனைத்து பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் ;
ஆபத்தான உள்ளடக்கங்கள், மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் பதிவுகள் போன்றவற்றை GROK வலைத்தளம் முடுக்கத் தவறியது.
அதனை தொடர்ந்து அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க MCMC உத்தேசித்து வருவதாக, அமைச்சர் கூறினார்.
இதற்கு முன்னர், தெலிகிராம் செயலி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை, அமைச்சர் நினைவுக்கூர்ந்தார்.
அரசின் பல்வேறு கொள்கைகளால் நாடும், நாட்டு மக்களும் முன்னேறும் அதே வேளை, அவர்களை பாதுகாக்கவும் அரசு உறுதிப்பூண்டுள்ளது.
இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் நடப்பிலுள்ள சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த, சமூக வளைத்தளங்களுடன் MCMC பேச்சு நடத்தி வருவதாக, டத்தோ ஃபாஹ்மி குறிப்பிட்டார்.Admin:sabthamstv.