Thursday, 16 April 2026

நாட்டின் ஆள்பலச் சந்தை சிறப்பான அடைவுநிலையைப் பதிவுச் செய்து வருகிறது...

Kuala Lumpur,Jan13

கடந்த ஆண்டு நவம்பரில், வேலை இல்லாதோர் விகிதம் 2.9 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளதை, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிகாட்டினார்.

பொருளாதாரம், தொழில்நுட்பம், போன்ற உலகளாவியச் சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் ஆள்பலச் சந்தை போட்டியாற்றல் வாய்ந்ததாக தொடர்ந்து நீடிக்கிறது.

நிச்சயமற்ற வேலைச் சூழல் போன்றச் சவால்களை நாட்டின் பொருளாதாரம்

எதிர்நோக்கிய போதிலும்,

மலேசியாவின் வேலை வாய்ப்பு சூழியல் நிலைத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேற்கல்வியை முடித்த புதிய பட்டதாரிகளுக்கு, எளிதில் வேலை கிட்டியது அதற்கு சான்று பகன்றுள்ளது.

நாட்டில் தற்போது திறன் பெற்ற மற்றும் திறன் பட்டைத் தீட்டிக் கொண்டிருப்போருக்கான வேலை வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மலேசியாவில் உயர்தரம் வாய்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க, இது வழிகோலும் என, டத்தோஸ்ரீ இரமணன் குறிப்பிட்டார். Admin:sabthamstv.