Thursday, 16 April 2026

ஊழலையும் அதிகார முறைகேட்டையும் ஒழிப்பதில், தீவிரமான அணுகுமுறையை SPRM நிலைநாட்டுகிறது.

Kuala Lumpur,Jan 14

காணாமல் போன சொத்துகளை மீட்டு-எடுப்பதிலும் பெரும் முனைப்பு காட்டுவதாக, அதன் தலைமை ஆணையர், TAN SRI AZAM BAKI தெரிவித்தார்.

SPRM-இன் ஆக்கத்தன்மை மீதான சமுதாயத்தின் மதிப்பீட்டையும், கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அதன் அடைவுநிலையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

வெறும் புலனாய்வுகளோடு மட்டும், அந்த ஆணையம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை.

மாறாக, அரசாங்க நிதிக்கசிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்யும் முயற்சிகளையும் அது விரிவுபடுத்துவதாக, Tan Sri Azam Baki கூறினார்.

இதனிடையே, மலேசிய ஆயுதப்படையில் நிகழ்ந்த கையூட்டு தொடர்பில், மேலும் ஓர் உயரதிகாரி கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 11 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டதை உறுதிபடுத்திய Tan Sri Azam BAKI, தொடர்புடைய சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் கூறினார்.

அதேவேளை, இதற்கு முன் கைது செய்யப்பட்ட, தரைப்படை முன்னாள் தளபதி ஒருவர், தடுப்புக்காவல் காலம் முடிந்து, கடந்தத் திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டார்.

அவர்கள் இருவரை உட்படுத்திய விசாரணையின் துல்லியத் தகவல்கள், நாளைய ஊடகச் சந்திப்பில் வெளியிடப்படும் என்றும் Tan Sri Azam BAKI கோடிகாட்டினார்.

இந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 22 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர சொத்துkalai , கிழக்குக்கரையில் உள்ள குடியிருப்பு ஒன்றில், SPRM, இதற்கு முன் பறிமுதல் செய்தது.

இவவேளையில், உயர்நிலை அதிகாரிகள் தொடர்புடைய புலனாய்வு அறிக்கைகள் சிலவற்றை, SPRM, குறுகிய காலத்தில் நிறைவு செய்யவிருக்கிறது.

அந்தப் புலனாய்வுகளை SPRM விசாரணை அதிகாரிகள் துல்லியமாக மேற்கொள்வர் எனும் உத்தரவாதத்தை, தலைமை ஆணையர் முன்வைத்தார்.

குறிப்பிட்ட இலக்குடன் பணப்புழக்கம், அதன் நோக்கம் என முழுமையான வலுவான சான்றுகளுடன் அந்த விசாரணை அறிக்கை ஆயத்தம் செய்யப்படும் என, TAN SRI AZAM BAKI, உறுதியளித்தார். Admin:Sabthmstv