Kuala Lumpur,Jan 14
மாணாக்கர் சத்தான உணவுகள் உட்கொள்வதை உறுதிச் செய்ய, அது துணை புரியும் என, சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கல்வி அமைச்சின் ஒத்துழைப்போடு, பள்ளிச் சிற்றுண்டிச்சாலைகளின் நிர்வாகம் மட்டுமல்லாது, நடவடிக்கைகள் அல்லது நிகழ்ச்சிகளின் போது உணவுகள் தயாரிக்கும் முறை மீதும், கூடுதல் கவனம் செலுத்தப்படும் என, சுகாதார அமைச்சின், உணவுப் பிரிவின், உதவித் தலைவர் SITI ADIBAH AB. HALIM விவரித்தார்.
சத்தான, சீரான உணவு முறை, மாணவர்களின் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் மிகவும் அவசியம்.
அதோடு, உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் வராமல் தடுப்பதற்கும் அது வழிகோலும்.
அதே வேளையில், மாணாக்கரின் நலன் மற்றும் சிறந்தக் கற்றல் திறனிற்கு, உணவு முறை முக்கிய காரணியாக அமைவதாக, SITI ADIBAH கூறினார். admin:sabthmstv