Thursday, 16 April 2026

ஒற்றுமை ஓங்கட்டும்! இன நல்லிணக்கம் வலுப்பெறட்டும்!

கோலாலம்பூர், ஜன.15-

FACEBOOK-இல் பொங்கல் வாழ்த்துச் செய்தியைப் பிரதமர் பதிவேற்றியுள்ளார்.

பார்வை பலவாறாக இருப்பினும், பின்புலமும் நிலைப்பாடும் மாறுபட்டிருப்பினும்,

ஒருமைப்பாட்டு உணர்வு தொடர்ந்து வலுப்பெற வேண்டும்.

அமைதியான, வளமான, நல்வாழ்வு மிக்க நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளங்கள் அவை என பிரதமர் சுட்டினார்.

பெற்றதைப் படைப்பது என்பது தொன்ம வழிபாடு.

அவ்வகையில், விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொங்கல் வைத்துக் கொண்டாடுவது, இந்தியர் பண்பாடு.

இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி நவில்வதை தத்துவமாகக் கொண்டிருக்கிறது, பொங்கல் திருநாள்.

இந்தப் பொங்கல், மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், பொருள்பொதிந்த அன்பையும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என, டத்தோஸ்ரீ அன்வார், வாழ்த்தினார்.admin:sabthamstv