Thursday, 16 April 2026

ஜொகூர் பாரு- சிங்கப்பூர் துரித கடவு இரயில் திட்டம்

Kuala Lumpur,Jan 15

அட்டவணைப்படி அதன் கட்டமைப்பும் அடிப்படை வசதிகளின் கட்டுமானமும் முழுமை பெறும் நிலையில் உள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE தெரிவித்தார்.

இரயில் பெட்டிகள், தொடர் வண்டி நிலைய முதன்மை உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பையும் சீரான இயக்கத்தையும் உறுதிபடுத்தும் பொருட்டு, அந்த விரைவு இரயிலின் வெள்ளோட்டம் சில மாதங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கோடிகாட்டினார்.

ஜொகூர் பாருவில், தண்டவாளத்தின் மீதான அதன் வெள்ளோட்டம் தொடங்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில், மலேசிய மனை வாங்குதல், வீடமைப்பு மேம்பாட்டுக் கழகம் REHDA-வின் இளைஞர் முன்னெடுப்பைத் தொடக்கி வைத்த LOKE, ஊடகத்தாரிடம், அந்தத் தகவல்களைப் பகிர்ந்தார்.