Thursday, 16 April 2026

பேரரசர் சுல்தான் இப்ராஹிமை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சந்தித்தார்.

17 Jan,கோலாலம்பூரில் உள்ள புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில், அண்மைய நாட்டு நடப்புகள் குறித்து பேரரசருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அந்தச் சந்திப்பு குறித்து, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்காண்டாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இடுகையிடப்பட்டது.

அரசாங்கத்தின் மேலாண்மை முறைமை, மக்கள் நலன் எப்போதும் காக்கப்படுவதை உறுதி செய்யும் முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகள், தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

அமைதி, செழிப்பு, நீடித்த நல்வாழவு ஆகியவற்றை, நாட்டு மக்கள் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை டத்தோஸ்ரீ அன்வார் வெளிப்படுத்தினார்.admin:sabthamstv