Thursday, 16 April 2026

ஒளிரும் சந்திரனுக்குக் கூட மாதம் ஒருமுறை மறைவு உண்டு...

கோலாலம்பூர், டிச.23 ஒளிரும் சந்திரனுக்குக் கூட மாதம் ஒருமுறை மறைவு உண்டு.

மண்ணை விட்டு மறைந்தாலும், தமிழ்க்கூறும் ஒவ்வொருவர் மனத்திலும் மறையாது ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது, ஒரு சந்திரன்.

ஆம், அதன் பெயர் இராமச்சந்திரன்.

MGR எனும் அடைமொழியுடன் இன்னமும் ஒவ்வொருவர் நாவிலும் உச்சரிக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மறைந்து இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ஒழுக்கத்தையும் கட்டுக்கோப்பையும் திரைப்பட கதாபாத்திரங்களில் மட்டுமல்லாது, மெய்யியல் வாழ்விலும் வாழ்ந்து காட்டி உண்மைக்கு வலுசேர்த்தவர்.

சினிமா என்பது வெறும் பொழுது போக்கு என்றிருந்த நிலையில் அறிவுக்கும் வேலை கொடுக்கும், ஆற்றலுக்கும் வழிவகுக்கும் எனும் நேர்முறைச் சிந்தனையை உருவாக்கி, உருமாற்றம் தந்தவர் எம்.ஜி.ஆர்.

சினிமாவை அழகாக்கி, வண்ணமயமாக்கி, வாழ்வியல் இன்பமாக்கித் தந்ததில் எம்.ஜி.ஆருக்குப் பெரும்பங்கு உண்டு என்றால் அது மிகையில்லை.

38-ஆம் ஆண்டு நினைவுநாளில் அன்னாரின் கோட்பாடுகளை நினைவுகூர்வதில் பெருமையடைகிறது சப்தம்ஸ் டிவி. Admin-sabthamstv.