Thursday, 16 April 2026

ஜப்பானில் பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல்!

Tokyo,Jan 20

இந்தத் திடீர் தேர்தலில் தமது கொள்கைகளை நிறைவேற்ற, வலுவான அதிகாரத்தை அவர் எதிர்பார்க்கிறார்.

ஜப்பானில் வரும் 23 ம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 27 ம் தேதி தேர்தல் பரப்புரைகள் தொடங்கப்படும்.

பின்னர் அடுத்த மாதம் எட்டாம் தேதி வாக்களிப்பு நடத்தப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

கடந்தாண்டு அக்டோபரில் SANAE TAKAICHI அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றப் பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தலாக இது உள்ளது.

பதவியேற்புக்கு முதல் நாள், அவரின் தாராளவாத மக்களாட்சிக் கட்சி-I-D-P, ஜப்பானின் புத்தாக்க கட்சியுடன் கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

ஜப்பானில் மக்களவை உறுப்பினர்கள், நாளுமன்றம் கலைக்கப்படாவிடில் நான்கு ஆண்டு தவணைக்குச் சேவை செய்யலாம் என அந்நாட்டு அரசமைப்பு கூறுகிறது. ADMIN:SABTHAMSTV