Thursday, 16 April 2026

வங்காளதேசத்தின் புதிய பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார், TARIQUE RAHMAN

DHAKA,FEBRUARY 18

2024 உள்நாட்டுக் கிளர்ச்சிக்குப் பின், தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் அரசாங்கம் வங்க தேசத்தில் அமைந்திருந்தாலும், 

பெரும் சவால்கள் அதற்குப் பட்டியலிட்டுக் காத்திருக்கின்றன. 

பிரதமராக 5 ஆண்டுகள் பதவி வகிக்கவிருக்கும் தாரிக் ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகன் ஆவார். 

லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய அவர், BNP கட்சிக்கு மீண்டும் மகத்தான வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகிய இரு பெண் பிரதமர்களே மாறி மாறி பதவியில் இருந்தனர்.

35 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் ஒருவர் பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார். 

60 வயதான தாரீக், வங்கதேசத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் பொருளாதாரத்தையும் மீட்சியுறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

ஷேக் ஹசினாவைப் பதவியில் இருந்து வீழ்த்திய பின்னரும், அந்தத் தெற்காசிய நாட்டில் அமைதித் திரும்பவில்லை. 

அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற முகமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் கீழ், வன்முறைகள் அங்கு ஓங்கின. 

குறிப்பாக, சிறுபான்மையினர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். 

அதனைச் சீர் செய்ய வேண்டிய பெரும் கடப்பாடு, தாரீக் வசம் உண்டு. 

இந்நிலையில், அந்தப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் அதிபரை வரவேற்க வேண்டியிருந்ததால், மோதி அதில் கலந்து கொள்ள இயலவில்லை. 

ஆயினும், மக்களவைத்தலைவர் ஓம் பிர்லா அதில் பங்கேற்றார்.

இந்தியாவுக்கு வருமாறு, தாரீக்கு, மோதி அழைப்பு விடுத்துள்ளார். 

ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஷேக் ஹசினாவுக்கு, இந்தியா அரசியல் அடைக்கலம் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.admin@sabthamstv