COSTA RICA,Jan 14
வரும் பிப்ரவரி முதலாம் நாள் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னர், அந்நாட்டுத் தலைவரை கொல்லத் திட்டமிடப்பட்டிருந்ததா, அதிகார தரப்ப்பு தெரிவித்தது.
COSTA RICA-வின் அதிபரைக் கொல்ல, கொலையாளி ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டது குறித்த, இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றதாக,
அந்நாட்டு உளவு-தேசிய பாதுகாப்பு இயக்குநர் JORGE TORRES குறிப்பிட்டார்.
அது தொடர்பாக, பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஐயத்திற்குரிய நபரின் அடையாளத்தையும் நோக்கத்தையும் குறித்து, தொடர்புடைய பெண் தகவல் அளிக்கவில்லை, என, அரசுத் தரப்பு வழக்கறிஞர் CARLO DIAZ கூறினார்.
COSTA RICA அரசமைப்பின் கீழ், தொடர்ந்து இரண்டாம் தவணை அதிபர் பதவிக்கு போட்டியிட, Carlo Diaz-க்கு தடை விதிக்கபட்டிருந்தது.
அவருக்கு மாற்றாக, LAURA FERNANDEZ தேர்தல் களத்தில், போட்டியிட உள்ளார்.
இவ்வேளையில், நேற்று, EL SALVADOR அதிபர் NAYIB BUKELE, COSTA RICA-விற்கு வருகைப் புரிந்ததை அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அந்நிய தலையீடுகள் இருக்கலாம் என, எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை விடுத்தனர். admin:sabthmstv