புளோரிடா, டிச 23: "டிரம்ப் கிளாஸ்"!
வலுவான பாதுகாப்பும், மிகுந்த ஆயுத வசதிகளும் நிரம்பிய, புதிய வகை அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு, அந்நாட்டு அதிபர் டோனால்ட் டிரம்ப் சூட்டப் போகும் பெயர்.
அவ்வகையான இரண்டு கப்பல்கள், முதற்கட்டமாகக் நிர்மாணிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரலாற்றில், அது போன்ற கப்பல் தயாரிக்கப்பட்டதில்லை என டிரம்ப் கூறினார்.
தமது புளோரிடா இல்லத்தில் ஊடகத்தாரைச் சந்தித்த அவர், ஏவுகணைகள், அதி வேக ஏவுகணைகள், அதி நவீனத் துப்பாக்கிகள் ஆகியவற்றை, அந்த வகை கப்பல்கள் கொண்டிருக்கும் எனக் குறிப்பிட்டார்.
இப்போது இருக்கும் நாசகாரிக் கப்பல்களை விட, அவை பெரிதாக இருக்கும்.
விரிவடைந்து வரும் சீனாவின் கடற்படையின் ஆதிக்கத்தைச் சமாளிக்க, அவை துணைகோலும் என அவர் கருத்துரைத்தார்.
உலகில் வலிமையான கடற்படையைக் கொண்டிருக்கும் நாடாக அமெரிக்கா தொடர்ந்து விளங்க, அந்த முன்னெடுப்பு தேவைப்படுவதாக,டிரம்ப் விளக்கினார். Admin-sabthamstv.