கோலாலம்பூர், டிச.30- 80 வயதான அவர், இருதயக் கோளாறு, நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு என பல்வேறு உடல்நலச் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார்.
Khaleda Zia வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராவார்.
முன்னாள் பிரதமர் SHEIKH HASINA ஆட்சி காலத்தில் சிறை தண்டனை அனுபவித்த போது, KHALEDA ZIA-வின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
காலமான KHALEDA ZIA-வின் ஆன்மா அமைதியுற பிரார்த்திக்குமாறு, நாட்டு மக்களை வங்காளதேச தேசிய கட்சி-B-N-P கேட்டுக் கொண்டது.
அந்த முன்னாள் பிரதமரின் இறப்பை, BNP ஊடகப் பிரிவுத் தலைவர் MOUDUD ALAMGIR PAVEL உறுதிபடுத்தினார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும், 2026 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில், SHEIKH HASINA-வுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டு, மக்கள் எழுச்சியை ஏற்படுத்தப் போவதாக, KHALEDA ZIA, கடந்த மாதம் கூறியிருந்தார். Admin:sabthamstv