Thursday, 16 April 2026

பாதுகாப்பு உத்தரவாதத்தை KYIV பெற்ற பின்னரே, உக்ரைனில் இராணுவச் சட்டம் அகற்றப்படும்.

கோலாலம்பூர், டிச.30- FLORIDA-வில் அமெரிக்க அதிபர் DONALD TRUMP-ஐ சந்தித்த உக்ரைன் அதிபர் VOLODYMYR ZELENSKYY அந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.

பாதுகாப்பு உத்தரவாதமின்றி, உக்ரைன் - ரஷ்ய நெருக்கடி உண்மையிலே முடிவுக்கு வராது.

அந்தப் பாதுகாப்பு உத்தரவாதத்தின் ஓர் அங்கமாக, மேற்கத்தி இராணுவம் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் ZELENSKYY கேட்டுக் கொண்டார்.

டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஊடகத்தாரைச் சந்தித்த அவர், அமெரிக்க-உக்ரைனிய பாதுகாப்பு உத்தரவாத உடன்படிக்கை 100 விழுக்காடு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும், அதற்கான ஆவனம் இன்னமும் கையெழுத்திடப் பட வேண்டியிருப்பதாக ZELENSKYY குறிப்பிட்டார். Admin:sabthamstv