NEW YORK , JAN-1 அமெரிக்காவின் மிகப் பெரிய நகரத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள முதல் முஸ்லிமும், தெற்காசிய வழித்தோன்றலுமான அவர், குர்-ஆன் மீது கைவைத்து, பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
1904-இல் கட்டப்பட்டு, 1945-இல் பயனற்று போன, நியூயார்க்கின் முதன்மை சுரங்க ரயில் நிலையமான கைவிடபப்ட்ட நிலையில் இருக்கும் OLD CITY HALL-இல் ZOHRAN, பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
NEW YORK சட்டத்துறைத் தலைவர் LETITIA JAMES முன்னிலையில், அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
34 வயதான MAMDANI, உகாண்டாவில் குடியேறிய இந்திய வம்சாவளி பெற்றோருக்குப் பிறந்தவராவார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அவர், நவம்பர் 4-ஆம் நாள் நடைபெற்ற நியூ யார்க் மேயர் தேர்தலில், முன்னாள் நகரத் தலைவரையும் குடியரசு கட்சி வேட்பாளரையும் வென்றார்.admin:sabthamstv