Thursday, 16 April 2026

ஏஎப்சி வெற்றியாளர் லீக் காற்பந்தாட்டத்தில் தோல்வி காணா நிலையை தொடர்கிறது, அல்-ஹிலால்

ரியாத், டிச 23; ஏஎப்சி வெற்றியாளர் லீக் காற்பந்தாட்டத்தில் தோல்வி காணா நிலையை தொடர்கிறது, அல்-ஹிலால்

ஷார்ஜா எப்சிக்கு எதிரான ஆட்டத்தில் அது ஒற்றைக் கோலில் வாகை சூடியது.

முற்பாதி ஆட்டம் வரையில் இரு அணிகளும் கோல் எதனையும் புகுத்தவில்லை.

முழுநேர ஆட்டம் நிறைவுற ஒன்பது நிமிடங்கள் இருக்கும் தருவாயில் அல்-ஹிலால்லின் வெற்றியை உறுதி செய்தார், மால்கம்.

சக வீரர், யாவோ கேன்சிலோ தட்டிக் கொடுத்த பந்தை அவர் கோலாக்கினார்.

இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுக்குள் நுழைந்துவிட்ட அல்-ஹிலால்,, ஏஎப்சி வெற்றியாளர் லீக் பட்டியலில் 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

ஷார்ஜா எப்சி அந்த பட்டியலில் ஏழாம் நிலையில் உள்ளது. Admin-sabthamstv.