Thursday, 16 April 2026

தாய்லாந்து 2025 சீ போட்டியில், இலக்கிடப்பட்ட 200 பதக்கங்களுக்கும் கூடுதலாக,231 பதக்கங்களைக் கைப்பற்றியது மலேசியா.

கோலாலம்பூர், டிச 22- தாய்லாந்து 2025 சீ போட்டியில், இலக்கிடப்பட்ட 200 பதக்கங்களுக்கும் கூடுதலாக,231 பதக்கங்களைக் கைப்பற்றியது மலேசியா.

நாட்டிற்கு இந்த மாபெரும் வெற்றியை ஈட்டி தந்த விளையாட்டு வீரர்களுக்கு பேரரசர் சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா ஸரித் சோபியாவும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்கினர்.

சீ விளையாட்டு முழுதும் மலேசிய அணியினர் பங்குக் கொண்ட அனைத்து போட்டிகளும் சவால் மிகுத்ததாக இருந்தாலும், அவர்களின் அயராது அர்பணிப்பும், போற்றியாற்றலையும் குறித்து பேரரசர் பாராட்டினார்.

அதோடு, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வீரர்கள் வெற்றி பெறுவதற்காக பாடுப்பட்ட தேசிய விளையாட்டு மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கு பேரரசர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இவர்களின் இந்தச் சாதனை விளையாட்டின் மீது வீரர்கள் கொண்டிருந்த தொடர்ச்சியான பங்களிப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை,

மாறாக நாட்டின் விளையாட்டு துறையை மென்மேலும் வலுப்படுத்த ஓர் ஊக்கியாக அமைகிறது.

அதுமட்டுமின்றி , அனைத்துலக அரங்கில் தொடர்ந்து நாட்டின் பெயரை மணக்கச் செய்ய இந்த மாபெரும் வெற்றி வழிகோலுவதாக பேரரசர் நம்பிக்கை தெரிவித்தார். Admin- Sabthamstv