Thursday, 16 April 2026

மலேசிய பொது பூப்பந்து போட்டி!

Kuala Lumpur,Jan 11

சொந்த மண்ணில், ஆடவர் இரட்டையர் வெற்றியாளர் உருவாக வேண்டும் எனும் நாட்டின் 12 ஆண்டு காத்திருப்பு, மேலும் நீள்கிறது.

BUKIT JALIL AXIATA ARENA அரங்கில் இன்று மாலை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்,

AARON-WOOI YIK கனவைச் சிதைத்தது, உலகின் முதன்மை ஆடவர் இரட்டையர் பூப்பந்து பிரிவில் முதல் நிலையில் உள்ள தென் கொரியாவின் KIM WON HO-SEO SEUNG JAE இணை.

முதல் சுற்றில், 21-க்கு 15 என, கொரிய இணை முன்னிலை வகித்தது.

உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையில் இருக்கும் தேசிய ஆடவர் இரட்டையர்கள், பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் எழுச்சி முழக்கத்தின் ஊடே, 21-க்கு 12 என வெற்றியைச் சாதகமாக்கினர்.

ஆனாலும், வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாம் சுற்றில், தென் கொரிய இணை, 21-க்கு 18 என, வாகை சூடியது.

ஆகக் கடைசியாக, 2014 மலேசிய பொது பூப்பந்து போட்டியில், GOH V SHEM-LIM KHIM WAH ஆடவர் இரட்டையர்கள், வெற்றி பெற்றனர். Admin: sabthamstv.