Thursday, 16 April 2026

கபடி விளையாட்டை ஒரு மாபெரும் விழாவாக ஏற்று நடத்தியது, பினாங்கு மாநிலம்.

Penang,January 3

தமிழ்ப்பள்ளி மாணாக்கர் தொடங்கி பெரியவர்கள் வரையில் தங்களது அபார திறமையை அதில் வெளிக் கொணர்ந்தனர்.

குறிப்பாக, 12 வயதுக்கும் கீழ்பட்டோர் பிரிவில் எட்டு தமிழ்ப்பள்ளிகள் பங்குக் கொண்டன.

ஆண்கள் பிரிவில் பினாங்கு இராமகிருஷ்ணா  தமிழ்ப்பள்ளியும் மகளிர் பிரிவில் ஜாவி தோட்ட தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின.

பெரியவர்களுக்கான பிரிவில் வடக்கிலிருந்து கெடா, பெர்லிஸ், பேரா, பினாங்கு ஆகிய மாநிலங்கள் தங்களது போட்டியாளர்களை அனுப்பி வைத்தன.

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ சுந்தர ராஜூ சோமு போட்டியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்ததோடு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

வழக்கமாக பினாங்கு விழாவை முன்னிட்டு பல ஆண்டுகளாக அப்போட்டி நடத்தப்படும்.

ஆனால், மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் LRT இலகு ரயில் கட்டுமான திட்டத்தினால் அடுத்த ஆறாண்டுகள் அப்போட்டியை நடத்த சாத்தியமில்லை என மாநில கபடி சங்கத்தலைவர், அர்ஜுணன் கந்தசாமி தெரிவித்தார்.admin: sabthamstv