கோலாலம்பூர், டிச 21 நாளை நடைபெறவிருக்கும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம், தாய்லாந்து - கம்போடியா இடையிலான பதற்றத்தை தணிக்க, சிறந்தத் தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை தகராற்றுக்கு, அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் நீடிக்கும் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, இரு நாடுகளும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்.
இரு அண்டை நாடுகளும் சுமூகமாக பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர மலேசியா தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்கும் என அவர் கோடிகாட்டினார்.
அதன் மூலம், நியாயமான, நிரந்தரமான தீர்வைக் காண இயலும் என, அவர் தமது முகநூலில் இடுகையிடடார்.
கம்போடிய பிரதமர் HUN MANET, தாய்லாந்து பிரதமர் ANUTIN CHARNVIRAKUL, ஆகியோருடன் தனித்தனியே தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட போது,
டத்தோஸ்ரீ அன்வார் அந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.
வட்டார நாடுகளின், சுபிட்சத்தையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட,
இரு நாட்டுத் தலைவர்களும், அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான,
உரிய நடவடிக்கைகளை விவாதிக்க வேண்டும்.
அதோடு, தாய்லாந்து - கம்போடியா இடையிலான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர, இரு நாடுகளும், பரஸ்பர மரியாதையையும், விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தினார்.Admin -Sabtham's TV