Thursday, 16 April 2026

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் வலுக்கும் மோதல்கள்!

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் வலுக்கும் மோதல்கள்!

கோலாலம்பூர், டிச 21- இரு வாரங்களாக நீடிக்கும் தகராற்றின் விளைவாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக, கம்போடிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.

தாய்லாந்திற்கு சொந்தமான F-16 போர் விமானங்களின், தொடர்ச்சியான வான்வழி தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால்,

மகளிர், சிறார் உள்ளிட்ட 5 லட்சத்து 18 ஆயிரத்து 611 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

அதே வேளையில், தாய்லாந்து எல்லையில் தொடரும் தாக்குதல்களால், 4 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அந்த இரு தென்கிழக்காசிய நாடுகளிடையே நிலவும் மோதலில், தாய்லாந்தில் 22 பேரும், கம்போடியாவைச் சேர்ந்த 19 பேரும் உயிரிழந்தனர்.

காலனித்துவ ஆட்சியிலிருந்தே, பகிரப்படும் 800 கிலோமீட்டர் தூர எல்லை குறித்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே, கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஐநா உட்பட, ஆசியான் உச்சநிலைக் கூட்டத்திற்கு தலைமையேற்றிருக்கும் மலேசியா, சீனா, அமெரிக்கா, போன்ற நாடுகளும் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன.

அதற்கு உரிய தீர்வு காணும் வகையில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டம் நாளை கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. Admin-Sabthamstv