புகுஷிமா,ஜப்பான், டிசா 22, உலகின் மிகப்பெரிய அணு ஆலையை மீண்டும் திறக்கும் திட்டத்துக்கு ஜப்பான் நிகிதா சட்டமன்றம் ஆதரவளித்தது.
2011 ம் ஆண்டு புகுஷிமா பேரிடருக்குப் பின்னர், முதல் முறையாக அதன் செயல்பாடுகளை தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
15 ஆண்டுகளுக்குப் பின்னர் கஷிவசாகி கரிவா அணு ஆலையைத் திறக்க நிகிதா ஆளுநர் அனுமதியளித்தப் பின்னர் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2011 ஆண்டு மார்ச் 11 ம் நாள் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக
புகுஷிமா டாய்ச்சி அணு ஆலையில் மூன்று உலைகள் உருகி, கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டது.
காற்றிலும் கடலிலும் கதிர்வீச்சு கலந்ததால் சுமார் ஈராயிரம் பேர் தைராய்ட், புற்றுநோய் பாதிப்புகளுக்கு இலக்காகினர்.
சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் தற்போது படிம எரிபொருள்களை அதிகம் சார்ந்திருப்பதைக் குறைக்கவும்,
செயற்கை நுண்ணறிவு துறையில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை ஈடு செய்யவும்
அணுசக்தி உற்பத்திக்கு புத்துயிர் அளிக்க ஜப்பான் திட்டமிடுகிறது.
அது தொடர்பான கூடுதல் விநியோக மசோதா, 53 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.admin-Sabthams TV