Thursday, 16 April 2026

இந்திய நகரங்களில் வாழும் மக்கள், அங்குள்ள உயரமான சுற்றுலாத்தலங்களுக்கு படைடுக்க தொடங்கியுள்ளனர்

புதுடில்லி, டிசா 22,  இந்திய நகரங்களில் வாழும் மக்கள், அங்குள்ள உயரமான சுற்றுலாத்தலங்களுக்கு படைடுக்க தொடங்கியுள்ளனர்.நகர்களில் காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்க, பெருநகர மக்கள் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.

பாரதத்தில் குளிர் காலத்தை ஒட்டி புகைமூட்டச் சிக்கல் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.அதனால், முதன்மை நகர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

வாகனங்கள், கட்டுமான தளங்கள் மற்றும் விவசாய நிலங்களை எரிக்கும் நடைமுறையிலிருந்து வெளியேற்றப்படும் கரிவளி,

குளிர் மற்றும் அடர்த்தியான காற்றில் சிக்கி அதன் விளைவாக வளிமாசு ஏற்படுகிறது.

புதுடில்லியில், காற்றின் தரக் குறியீடு 377-ஆக பதிவாகி காற்று மாசு ஆபத்தானக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

அதனால், பொது மக்கள் மூச்சு திணறல் உட்பட பலவேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.காற்று தூய்மைக்கேட்டை கையாள செயலாக்க தரப்பு கடுமையான விதிகளை அறிவித்துள்ளது.மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களுக்கு தண்டம் விதித்தல்,

தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகையை கட்டுப்படுத்துதல் ஆகியவை அவற்றுல் அடங்கும். Admin-Sabthams TV