Thursday, 16 April 2026

கம்போடிய- தாய்லாந்து பிணக்கைத் தீர்த்து வைப்பதில், நடுவராகச் செயலாற்ற, பிலிப்பின்ஸ் முன் வந்துள்ளது.

மணிலா, டிச 23 - கம்போடிய- தாய்லாந்து பிணக்கைத் தீர்த்து வைப்பதில், நடுவராகச் செயலாற்ற, பிலிப்பின்ஸ் முன் வந்துள்ளது.

அடுத்தாண்டு ஜனவரியில், அது ஆசியானுக்குத் தலைமையேற்கவிருக்கும் நிலையில், அந்தப் பொறுப்புத் தனக்குள்ளதாக, அது தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள், கம்போடிய, தாய்லாந்து எல்லைத் தகராற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில், கலந்துரையாடினர்.

அந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு, பிலிப்பின்ஸ் அவ்வாறு அறிவித்தது.

இரு நாடுகளும் அமைதித் தீர்வை விரும்பினால், அவற்றுக்கு உதவ ஆயத்தமாக இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மரியா தெரேர்சா லசாரோ கோடிகாட்டினார்.

இதற்கிடையில், போர் நிறுத்தம் குறித்து முடிவெடுக்க, இரு நாடுகளும் நாளை சந்திக்கும்.

அது இரு வழிப் பேச்சு எனக் கூறிய தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஷாக் புவாங்கேட்கியோவ் அதில் அமெரிக்கா அல்லது சீனாவின் தலையீடு இராது எனவும் குறிப்பிட்டார். Admin-sabthamstv.