Thursday, 16 April 2026

போர் நிறுத்தத்திற்கு உடன்பட்ட தாய்லாந்தைக்கும் கம்போடியாவுக்கும் அமெரிக்க அதிபர் DONALD TRUMP பாராட்டு தெரிவித்தார்!

வாஷிங்டன்,டிச.29-

மக்கள் நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் குடித்த, வலுத்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது குறித்து அவர் மனநிறைவை வெளிப்படுத்தினார்.

போர் நிறுத்தம் விரைவான, மிகச் சரியான முடிவு அது எனத் தமது TRUTH SOCIAL வலைத்தளத்தில் கருத்துரைத்தார்.

BEIJING, கோலாலம்பூர் ஆகியவற்றுடன் இணைந்து போர் நிறுத்தப் பேச்சுக்கு நடுவராக இருந்த WASHINGTON, அமைதி நடவடிக்கைக்குத் தோள் கொடுப்பதில் பெருமை கொள்வதாகக் கூறினார்.

 

பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM, டிரம்ப் ஆகியோர் தலைமையில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை, இம்மாதத் தொடக்கத்தில் இரு நாடுகளும் மீறின.

817 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துக் கொள்ளும் தாய்லாந்தும் கம்போடியாவும், எல்லை வட்டாரத்தை ஒட்டி கோயில்கள் அமைந்திருக்கும் பகுதிகளை நூறாண்டுக்கும் மேல் சொந்தம் கொண்டாடி வருகின்றன.admin:sabthamstv