ANKARA: Jan 8
அந்த இலக்கை எட்ட இயலும் என, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை கொண்டுள்ளார்.
நடப்பில் உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் வழங்கியிருக்கும் கடப்பாட்டின் அடிப்படையில் அந்த நம்பிக்கை அமைந்துள்ளது.
மலேசியா சிறந்த பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
குறிப்பாக, மலேசியா மின்கடத்தி தொழில்துறையில் உலக அளவில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறது.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களும் நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கின்றன.
இவற்றின் வாயிலாக, மலேசியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தக மதிப்பை அதிகரிக்க இயலும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
Ankara-வில் அதிபர் மாளிகை வளாகத்தில், துருக்கிய அதிபர் Recep Tayyip Erdogan-உடன் நடத்திய கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், டத்தோஸ்ரீ அன்வார், பேசினார்.
முன்னதாக, தகவல்-தொழில்நுட்பத் துறையில், இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடு உள்ளிட்ட ஆவணங்கள் பறிமாறிக் கொள்வதை, டத்தோஸ்ரீ அன்வாரும், Erdogan-உம் பார்வையிட்டனர். admin:sabthamstv