Thursday, 6 August 2026

மியன்மார் பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று நடைபெற்றது

அதன் பொருட்டு இராணுவம் புதிய வாக்களிப்பு மையங்களை திறந்தது.

ஆட்சிக் கவிழ்ப்பால் அரசியல் நிலையற்ற தன்மையையும் , ஆயுத மோதல்களையும் எதிர்நோக்கியுள்ள அந்தத் தென்கிழக்காசிய நாட்டில்,

பதற்றம் மிகுந்த பகுதிகள் உட்பட 100 தொகுதிகளில் இன்று மக்கள் வாக்களித்தனர்.

மியன்மார் பொதுத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் நிலையில் முதலாம் கட்டம் கடந்தாண்டு டிசம்பர் 28-ஆம் நாளும், இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்றும் நடந்தேறியது.

மக்களாட்சி நிலைநாட்டப்படும் எனக் கூறி, மூன்றாம் கட்ட வாக்களிப்பு வரும் 25-ஆம் தேதி நடத்தப்படும் என இராணுவம் அறிவித்தது.

முதற்கட்ட வாக்களிப்பில் குறைவான வாக்குகளே பதிவுச் செய்யப்பட்டன.

அதனால் பெரும்பான்மை தொகுதிகளில் இராணுவ அரசாங்கமே ஆதிக்கம் செலுத்துகிறது.

எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்,

இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும், மக்களாட்சியைப் பின்பற்றியும் நடத்தப்படவில்லை என வெளிநாட்டு அரசியல் நோக்கர்கள் சாடி வருகின்றனர்.

ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிறகு, கடந்த ஐந்தாண்டுகளில் அடுத்தடுத்து நடந்த மோதல்களால், மியன்மாரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அரசியல் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டனர். admin:sabthamstv.