Thursday, 16 April 2026

காப்பாற்ற வருகிறேன், கவலையின்றி போராடுங்கள்!அமெரிக்க அதிபர் DONALD TRUMP...

Washington,Jan 14

ஈரானில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வலுக்கும் நிலையில், தேசபக்தர்களை தொடர்ந்து போராடுமாறும்,

அவர்களை வதைக்க அல்லது அழிக்க நினைப்போரின் பெயர்களை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

பதலடி கொடுக்க உங்களுக்கான உதவி வந்துக் கொண்டிருக்கிறது என சூளுரைத்துள்ளார் டிரம்ப்!!

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக ஈரானியர்கள் போராட்டக் கனலில் இறங்கியுள்ளனர்.

அது வன்முறையாக உருமாறி ஈராயித்து மூன்று பேரின் உயிரை பலிக்கொண்டிருக்கிறது.

அவர்களில் ஆயிரத்து 850 பேர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

16 ஆயிரத்து 784 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என ஐயுறப்படுப்படுவதாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளதாக, ஈரானிய அரசு குற்றம்சாட்டி வரும் நிலையில்,,

போராட்டக்காரர்களுக்கு கரம் கொடுக்க அமெரிக்கப்படை வந்துக் கொண்டிருப்பதாக, TRUMP அறிவித்துள்ளார்.

மற்றொரு நிலவரத்தில் ஈரான் மீது கூடுதல் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசித்து வருகிறது.

ஜெர்மனிய தற்காப்பு அமைச்சருடன் இணைந்து E-U-வின் வெளியுறவு கொள்கை அதிகாரி KAJJA KALLAS அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானிய போராட்டக்காரர்களுக்கு முழு ஆதரவு நல்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறையால் சினமுற்ற பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட EU-வின் சில உறுப்பு நாடுகளும், பிரிட்டனும்,

நூற்றுக்கணக்கான ஈரானிய தூதர்கள், அரசத் தந்திர அதிகாரிகள் மீது தண்டனையை விதித்துள்ளன. admin:sabthmstv