Thursday, 16 April 2026

VENEZUELA தலைநகர் CARACAS-இல் அமெரிக்கா வெடிகுண்டுத் தாக்குதலை கட்டவிழ்த்தது.

VENEZUELA,Jan 14

அமெரிக்காவின் அந்தக் கொடூரத் தாக்குதலில், அதிகமானோர் பலியானதால், உடல்களை அடையாளம் காண, அதிகாரத் தரப்பினர் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

ஆதலால், மரபணுச் சோதனை வாயிலாக, தாக்குதலில் உயிரிழந்தோரின் உடல் அடையாளம் காணப்படும் என, VENEZUELA உள்துறை அமைச்சர் DIOSDADO CABELLO குறிப்பிட்டார்.

முன்னதாக, CARACAS-இல் நடத்தப்பட்டத் திடீர் தாக்குதலில், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதில் பாதிக்கப்பட்டோரைத் தேடி மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதால், உயிரிழந்தோரின் என்ணிகை இன்னமும் உறுதிச் செய்யப்படவில்லை.

இம்மாத தொடக்கத்தில், VENEZUELA மீது தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க இராணுவம்,

அந்நாட்டு அதிபர் NICOLAS MADURO-வையும், அவரது மனைவியையும், சிறைப்பிடித்தது. admin:sabthmstv